Wednesday, July 4, 2012

செல்வி ஜெ.ஜெயலலிதா பற்றி சிறு குறிப்புகள்

கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெயலலிதாவிக்குச் சூட்டப்பட்ட பெயர் அது.ஆனால் சில காலத்தில் `ஜெயலலிதாஆனார்.ஜெயா,ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித் தோழிகளால் அழைக்கப்பட்டவர்.அவரது அம்மாவுக்கு `அம்மு’. .தி.மு.வினர் அனைவருக்கும் `அம்மா
சர்ச் பார்க் மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால், மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில் படித்தார்.`எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் சர்ச் பார்க்கில் படிக்க வேண்டும்என்பதைத் தனது ஆசையாகச் சொல்லியிருந்தார்.

போயஸ் கார்டன், சிறுதாவூர் பங்களா, ஊட்டி கொடநாடு எஸ்டேட், ஹைதரபாத் திரட்சைத் தோட்டம் ஆகிய நான்கும் ஜெயலலிதா மாறி மாறித் தங்கும் இடங்கள். ஹைதரபாத் செல்வதைச் சில ஆண்டுகளாக நிறுத்திவிட்டார். இப்போதெல்லாம் திடீர் ஓய்வுக்கு சிறுதாவூர் மாதக்கணக்கில் தங்க வேண்டுமானால்..கொடநாடு!


உடம்பை ஸ்லிம்மாகவைத்துக் கொள்வதில் ஆரம்ப காலத்தில் அதிக அக்கறையுடன் இருந்தார். தினமும் வெந்நீரில் எலுமிச்சம்பழச்சாறும் தேனும் கலந்து குடித்தார்.இப்போது தினமும் 35 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட 13 கிலோ எடை குறைத்துள்ளார்!

ஜெயலலிதா நடித்த மொத்தப்படங்கள் 115. இதில் எம்.ஜி.ஆருடன் நடித்தவை 28. இருவரும் இணைந்து நடித்த் முதல் படம் `ஆயிரத்தில் ஒருவன்’.

'சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா' என்ற `அரசிளங்குமரிபடப் பாடல் தான் தனக்கு எப்போதும் பிடித்த நல்ல பாட்டு என்பார். அந்தப் பாடலை எழுதிய பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவியிடம் 10 லட்சம் பணம் கொடுத்து, அவரது எழுத்துக்களை நாட்டுடைமை ஆக்கினார்.

`அரசியலில் நான் என்றுமே குதிக்க மாட்டேன்என்று பேட்டி கொடுத்தவர் ஜெயலலிதா. `நாடு போகிற போக்கைப் பார்த்தால், ஜெயலலிதாகூட முதலமைச்சர் ஆகிவிடுவார்போலஎன்று அவர் நடிக்க வந்த காலத்தில் பேட்டியளித்தார் முரசொலி மாறன்.

ஜெயலலிதா முதலில் குடியிருந்தது சென்னை தியாகராயர் நகர் சிவஞானம் தெருவில் பிறகு, அடையாறு பகுதியில் குடி இருந்தார். படங்கள் குவிந்து,நடிப்பில் கொடிகட்டிய காலத்தில்தான், போயஸ் கார்டன் வீடு கட்டப்பட்டது அதன் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்துக் கட்டியவர், அவரது அம்மா சந்தியா.

``வீட்டுக்குள்ளே என்ன மாற்றமும் செய்யலாம், ஆனா,எங்க அம்மா வைத்த வாசலை மட்டும் மாற்றக் கூடாதுஎன்று சொல்லி இருக்கிறாராம் ஜெயலலிதா.

எப்போதும் அம்மா செல்லம்தான். அவருக்கு இரண்டு வயது இருக்கும்போதே அப்பர் இறந்துபோனதால், அந்த நினைவுகள் இல்லை. போயஸ் வீட்டுக்குள் நுழையும் இடத்தில் சந்தியா, எம்.ஜி.ஆர். ஆகிய இருவரின் படங்கள் மட்டுமே இருக்கும்.

எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற விழாவில் ஆறு அடி உயரமுள்ள வெள்ளிச் செங்கோலை எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா வழங்கினார். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த புகைப்படம் அதுதான்.

பெருமாளை விரும்பி வணங்குகிறார். மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் இதில் முதன்மையானது. மயிலை கற்பகாம்பாளையும்,கும்பகோணம் ஐயாவாசி பிரத்தியங்கராதேவியையும் சமீப காலமாக வணங்கி வருகிறார்.
தினமும் காலையில் நிஷாகந்தி எனப்படும் இருவாட்சி மலரைப் பறித்து பூஜைக் கூடையில் தயாராக வைத்திருப்பார்கள் கார்டன் பணியாளர்கள்.அதை எடுத்தபடியே பூஜை அறைக்குள் நுழைவார்.சமீபமாக பூஜையில் தவறாமல் இடம்பெறும் துளசி.

யாகம் வளர்ப்பது, ஹோமத்தில் உட்காருவதில் ஜெயலலிதாவுக்கு ஈடுபாடு அதிகம். யாகத்தில் ஆறு மணி நேரம் கூட உட்கார்ந்திருக்கிறார். அவசரமாக மந்திரம் சொன்னாலோ, தவறாகச் சொன்னாலோ, கண்டுபிடித்து நிறுத்தச் சொல்லும் அளவுக்கு வேத ஞானம் உண்டு.

இயற்கை உணவுக்குப் பழகி வருகிறார். பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி பசலை ஆகிய கீரை வகைகள் கொண்ட சூப் தினமும் இவருக்காகத் தயாராகின்றன கொடநாடு எஸ்டேட்டில் இந்த வகைக் கீரைகள் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.

சிறுதாவூர் பங்களா இருக்குமிடம் 116 ஏக்கர். அங்கு புறா,கிளி,காடை,கெளதாரி போன்றவற்றை வளர்த்து வந்தார். இந்திரா,சந்திரா என்ற இரண்டு ஈமுக்களும் வளர்த்தார். இரண்டும் திடீரென இறந்துவிட... ஈமு வளர்ப்பதையே விட்டுவிட்டார்.
`நான் அனுசரித்துப் போகிறவள்தான். ஆனால், எனக்கென்று சில சிந்தனைகள் உண்டு. அதை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டேன்என்று தனது கேரக்டருக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

பரதநாட்டியம், ஓரியன்டல் டான்ஸ் இரண்டையும் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்தவர். முதலமைச்சராக இருந்தபோது ஊட்டியில் மேடையைவிட்டு இறங்கி வந்து ஆடியதும், கடந்த ஆண்டு படுகர்களுடன் இணைந்து ஆடியதும் அடக்க முடியாத நாட்டிய ஆர்வத்தின் வெளிப்பாடுகள்!.

ஜெயலலிதாவின் 100 –வது படத்துக்கான பாராட்டு விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் `நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்என்று பாராட்டபட்டவர்!.

பழைய பாடல்களை மணிக்கணக்கில் கேட்டு லயிக்கிறார். ஜெயா டிவி-யில் வரும் பழைய பாடல்கள் அனைத்தும் அம்மாவின் விருப்பங்கள்தான்.

ரயில் பயணம் பிடிக்காது. கார் மற்றும் ஹெலிகாப்டர் பயணங்கள்தான் அதிக விருப்பம்.

போயஸ் வீட்டில் எப்போதும் ஏழு நாய்க்குட்டிகள் இருக்கும். அவரது பிறந்த நாளையொட்டி, ஆண்டுதோறும் ஒரு குட்டி புதிதாக இணைந்து கொள்ளும். இந்த எண்ணிக்கை காலப்போக்கில் அதிகமானதால், சில குட்டிகள் சிறுதாவூர், கொடநாடு எனப் பிரித்து அனுப்பிவைக்கப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள அத்தனை பிரபலங்களையும் தனது வாக் அண்ட் டாக் பேட்டிக்கு வரவழைத்து விட்ட என்.டி.டி.வி-யால், ஜெயலலிதாவின் மனதை மட்டும் மாற்ற முடியவில்லை. கடைசி வரை உறுதியாக இருந்து மறுத்துவிட்டார்!.

ஓஷோவின் புத்தகங்களை மொத்தமாக வாங்கி ரசித்து வந்தார். ஜெயலலிதா இப்போது ரமணர் பற்றியே அதிகம் படிக்கிறார். ரமணர் தொடர்பான முக்கியப் புத்தகங்கள் அத்தனையும் கடந்த நான் கைந்து மாதங்களாக அவர் மேஜையில் உள்ளன.

ஜெயலலிதாவின் முழு இருப்பும் போயஸ் கார்டனின் முதல் மாடியில் தான்.அங்கு சசிகலா மற்றும் முக்கியப் பணியாளர்கள் தவிர, யாருக்கும் அனுமதி இல்லை!.

-தவறான செய்திகள் ஏதும் இருந்தால் மன்னிக்கவும்.
-THANKS TO டிஸ்கி
SPECIALITIES:

தனியார் வங்கிகளின் வட்டிவிகிதத்தை குறைத்தது


வீராணம் குடிநீர் திட்டம்


லாட்டரி விற்பனைதடை சேமிப்பை அதிகரித்தது


வீரப்பன் & சட்ட ஒழுங்கு போலிஸ் பாதுகாப்பு
மழைநீர் சேகரிப்பு


தொட்டில் குழந்தை




கலைஞர் கருணாநிதி பற்றி சிறு குறிப்புகள்

டி.எம்.கருணாநிதி என்றுதான் ஆரம்ப காலத்தில் தன்னை அழைத்துக்கொண்டார் (திருவாரூர் முத்துவேலர்), பிறகு, மு.கருணாநிதி என்று கையெழுத்துப் போட்டார் இப்போது மு.க!
 தமிழ்நாட்டின் நிரந்தரத் தலைப்புச் செய்தி... கலைஞர் கருணாநிதி! ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும் எதிரணியில் தொடர்ந்தாலும் புகழ்க் கடலில் மூழ்கி,விமர்சன முத்தெடுத்து வெளியே வருபவர். பொது வாழ்வில் தலைமுறைகள் தாண்டியும் வலம் தமிழ்த் தேனி.


ஆண்டவரே’ என்றுதான் எம்.ஜி.ஆர். இவரை அழைப்பார். பிற்காலத்தில் `மூக்கா’ என்றும் அழைத்திருக்கிறார். `மூனாகானா’ என்று அழைப்பது சிவாஜியின் ஸ்டைல். இன்று கருணாநிதியின் மனைவி, மகன்கள், பேரன் பேத்திகள் உட்பட அனைவருமே `தலைவர்’என்றுதான் சொல்கிறார்கள்!.

தினமும் டைரி எழுதும் பழக்கம்கொண்டவர் அல்ல கருணாநிதி. ஆனாலும், அவருக்கு எல்லாம் நினைவில் அப்படியே இருக்கும்.
`என்னுடைய மூளையே எனக்கு ஒரு டைரி’ என்பார்!.



அதிகாலையில் எழுந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று நடைப் பயிற்சி செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார் கருணாநிதி. முதுகு வலி ஆபரேஷனுக்குப் பிறகு வாக்கிங் நின்றுவிட்டது! .


ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டவர். செரிமானத்தில் பிரச்னை இருந்தால், சைவமே பெரும்பாலும் சாப்பிடுகிறார்.நித்தமும் ஏதாவது ஒருவகைக் கீரை இருக்க வேண்டும். 


தி.மு.க. தேர்தல் செலவுக்கு எதிர்பாராத வகையில் 11 லட்சம் ரூபாய் வசூலித்துத் தந்ததைப் பாராட்டி, அண்ணா அணிவித்த மோதிரத்தைக் கழற்றியதே இல்லை.தங்க சங்கிலிகளை எப்போதுமே அணிந்ததில்லை!.

சின்ன வயதில் ஆர்வமாக விளையாடியது ஹாக்கி. திருவாரூர் போர்டு ஹைஸ்கூல் ஹாக்கி டீமில் இருந்திருக்கிறார். இப்போது கிரிக்கெட் பார்ப்பதில்தான் அதிக ஆர்வம்!.


ஏதாவது ஒன்றைப் படித்தால், அதை அப்படியே ட்விஸ்ட் செய்வதில் தனித்திறமை உண்டு. `வீரன் ஒருமுறைதான் சாவான்... கோழை பலமுறை சாவான்’ என்பது புகழ்பெற்ற பொன்மொழி. அதை கருணாநிதி, `வீரன் சாவதே இல்லை....கோழை வாழ்வதே இல்லை’ என்று மாற்றிப் பிரபலப்படுத்தினார்!.



ஆரம்ப காலத்தில் மறவன் மடல் என்று எழுதி வந்த கருணாநிதி, அண்ணா மறைவுக்குப் பிறகுதான் `உடன்பிறப்பே’ என்று தலைப்பிட்டு கடிதங்கள் எழுத ஆரம்பித்தார். `கடிதங்கள் எழுதுவதால்தான் என் மனவருத்தங்கள் குறைகின்றன’ என்பர்!.


பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி போடுவது அவரது பாணி. `ஆண்டவனை ஏற்றுக்கொள்கிறீர்களா?’ என்று ஒரு முறை கேட்கப்பட்டது.
`அது பிரச்னை அல்ல. ஆண்டவன் நம்மை ஏற்கிறானா என்றுதான் பார்க்க வேண்டும்’ என்று திருப்பி அடித்தார்!.

கருணாநிதி 40-க்கும் மேலான படங்களுக்கு கதை-வசனம் எழுதியிருக்கிறார். இதில் அவருக்கு அதிகம் பிடித்த வசனம்,`மனச்சாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது!.

ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’என்றுதான் என் கல்லறையில் எழுத வேண்டும் என்று கருணாநிதி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்!.

பூஜை அறை மாதிரியான மாடத்தில் கருணாநிதியின் அப்பா முத்துவேலர், அம்மா அஞ்சுகம், முதல் மனைவி பத்மாவதி ஆகியோரின் படங்கள் இருக்கின்றன.முக்கியமான நாட்களில், அங்கு வணங்கி விட்டுத்தான் வெளியில் புறப்படுவார்!.

சிறுகதை, நாவல், நாடகங்கள், கவிதைகள்,திரைக்கதை,வசனங்கள்,பாடல்கள் கார்ட்டூன் என எதையும் விட்டுவைத்ததில்லை கருணாநிதி.`ஆளும் திறமை இட்து மூளை... காவியமும் கற்பனையும் வலது மூளை. பரவலாக மனிதனுக்கு இரண்டில் ஒன்றுதான் மேன்மையாக இருக்கும். இரண்டும் மேன்மையாகச் செயல்படுவது கலைஞருக்குத்தான்’ என்றார் நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி!.

’தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்’ கோயில் கூடாது என்பதற்காக அல்ல, அது கொடியவர் கூடாரமாக ஆகிவிடக்கூடாது `வீழ்வது நாமாக் இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- கருணாநிதி எழுதிய இம் மூன்றும் தமிழகத்தில் அதிக முறை சொல்லப்பட்ட வாக்கியங்கள்!.


 12 முறை எம்.எல்.ஏ. 5 முறை முதலமைச்சர், 10முறை தி.மு.க. தலைவர் என்பது மாதிரியான சாதனை இதுவரை யாரும் செய்ததில்லை. இனியும் முடியுமா என்பது சந்தேகம்!.

புழல் ஏரி உடைவது மாதிரி இருக்கிறது என்ற தகவல் கிடைத்தும்,அதைச் சரிப்படுத்துவதற்கான ஆலோசனைகளைக் கொடுத்துவிட்டு, நள்ளிரவு 2.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கவலையுடன் உட்கார்ந்திருந்த சம்பவம் அவரது அதிகப்படியான் அக்கறையை உலகத்துக்குச் சொன்னது!.

படுக்கையில் உட்கார்ந்து பரீட்சை அட்டை வைத்து எழுதுவதுதான் அவரது வழக்கம்.உயரத்துக்காக இரண்டு தலையணைகளை அடுக்கிவைத்துக் கொள்வார். இன்றுவரை மை பேனாவைத்தான் பயன்படுத்துவார்!.

கோபாலபுரம், சி.ஐ.டி. நகர், தலைமைச் செயலகம், அறிவாலயம்,முரசொலி ஆகிய ஐந்து இடங்களிலும் அன்றைய செய்தித்தாள்கள் மொத்தமும் கருணாநிதிக்காகத் தனியாகக் காத்திருக்கும்!.



கடற்கரை மணலில் உட்கார்ந்து காற்று வாங்கிய படி பேசுவதுதான் கருணாநிதிக்குப் பிடிக்கும். அது முடியாததால், மாமல்லபுரம் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் கடலைப் பார்த்த அறையில் அடிக்கடி தங்குகிறார்!.

கருணாநிதிக்குப் பிடித்த தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம், பிடித்த புராணம் மகாபாரதம். எப்போதும் மேசையில் வைத்திருப்பது திருக்குறள்!.

தனிமை பிடிக்காது. எப்போதும் நண்பர்கள் புடைசூழ இருக்க வேண்டும் என்பது கருணாநிதியின் ஆசை!

-தவறான செய்திகள் ஏதும் இருந்தால் மன்னிக்கவும்.
-THANKS TO டிஸ்கி
SPECIALITIES:
50 வயதிலேயே சிலர் VRS வாங்கும்போது 80லும் இருக்கும் வலிமை

எந்த விசயத்தையும் இலகுவாக சாதிப்பது

நாலுவரி சொன்னாலும் நச்சுனு சொல்வது

எவரையும் அனுசரித்து அருகில் வைத்துக்கொள்ளும் திறன்

ஞாபக சக்தி

அரசியலில் மட்டும் அல்லாமல் பல துறைகளில் சாதனை


கேப்டன் விஜயகாந்த் - சிறு குறிப்புகள்

விஜயகாந்த்தின் நிஜப் பெயர் நாராயணன். அது தாத்தாவின் பெயர் என்பதால், விஜயராஜ் என வீட்டில் அழைக்கிறார்கள். சினிமாவுக்கு வந்த பின் டைரக்டர் எம்.ஏ.காஜா வைத்த பெயர் விஜயகாந்த். பின், அடுத்த படத்திலேயே டைரக்டர் விஜயன் அதை அமிர்தராஜ் என மாற்றியும் நிலைத்தது விஜயகாந்த்தான் !
 வீட்டுப் பூஜை அறையில் மெக்கா மதீனா படங்களும்,இயேசு- மேரி மாதா படங்களும், திருப்பதி வெங்கடாசலபதியும்,முருகனும்,பிள்ளையாரும் சிறப்பிடம் பெறுகிறார்கள். இப்பவும் மனசு சரி இல்லை என்றால், கண்ணூர் தர்காவுக்குப் போய் வழிபாடு செய்வார் விஜயகாந்த்!

ஐயப்பன் கோயிலுக்கு 18 வருடங்களாகச் சென்று வந்தவர், நடுவே பக்தர்கள் இவர் காலில் விழுந்து வணங்குவதைப் பழக்கமாகக்கொண்டவுடன்,இப்போது கோயிலுக்கு செல்வது இல்லை !
எல்லாத் தம்பி, தங்கைகளுக்கும் திருமணம் செய்து கடமையை முடித்த போது விஜயகாந்த்துக்கு வயது 37 ஆகிவிட்டது. அதற்குப் பிறகுதான் அக்காவின் வற்புறுத்தலின் பேரில் பிரேமலதாவைக் கைபிடித்தார். விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் !

 தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாக 1984 – ல் ‘மதுரை சூரன்’ முதல் ‘ஜனவரி 1’ படம் வரை 18 படங்களும் 1985 –ம் ஆண்டில் மட்டும் ‘அலை ஒசை’யில் ஆரம்பித்து ‘நானே ராஜா நானே மந்திரி’ வரை 17 படங்களும் ஹீரோவாக நடித்திருக்கிறார்.இந்தச் சாதனை வேறு எந்த ஹீரோவும் செய்யாதது !
அதே போல் எந்த நடிகரின் 100 வது படமும் அவ்வளவு பிரமாதமாக ஹிட் ஆனது கிடையாது
அதறகு விதிவிலக்கு கேப்டன் பிரபாகரன்


பள்ளியில் படிக்கும்போது ஃபுட் பால் பிரமாதமாக விளையாடுவார். இப்போதும் ஃபுட்பால் வெறியர். இங்கிலாந்து வரை போய் நேரில் ஃபுட்பால் போட்டிகளைப் பார்த்து ரசிப்பார். அவரது மகன்களுக்கும் இப்போது ஃபுட்பால் பிரியம் வந்து விட்டது !

விஜயகாந்த் வில்லனாக நடித்த ஒரே படம்... ‘இனிக்கும் இளமை’ அதற்குப் பிறகு எல்லாமே ஹீரோ வேடம்தான் !

இதுவரை விஜயகாந்த் 152 படங்களில் நடித்திருக்கிறார். 153 – வது படம் அவரது டைரக்ஷனில் வருகிறது. இவ்வளவு நாள் ஃபில்டில் இருந்ததற்கு ஒரு படம் டைரக்ட் செய்தாக வேண்டும் என்பது அவரது விருப்பம் !


நடிகர் ராஜேஷின் தம்பி திருமணத்தில்தான் எம்.ஜி.ஆரோடு கைகுலுக்கிச் சந்தித்துப் பேசினார் விஜயகாந்த். அதை ஒருவரும் புகைப்படம் எடுக்கவில்லையே என்ற ஆறாத வருத்தம் விஜயகாந்த்துக்கு உண்டு !

‘செந்தூரப் பாண்டி’யில் விஜய்யோடு நடித்து, ‘பெரியண்ணா படத்தில் சூர்யாவோடு நடித்து அவர்களை பி அண்ட் சி-க்கு கொண்டு சேர்த்த பெருமை விஜயகாந்த்க்கு உண்டு. இதை விஜய்யே ஒரு விழா வில் ஒப்புக்கொண்டு இருக்கிறார் !

விஜயாகாந்த்தின் மூத்த மகன் பிரபாகரன் இன்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படிக்கிறார். இளையமகன் சண்முக பாண்டியன் +1 படிக்கிறார். இரண்டு பேருக்கும் சினிமாப் பக்கம் வரும் ஐடியாவே இல்லையாம். யாரிடமும் நாங்கள் விஜயகாந்த்தின் மகன் என்று அடையாளப்படுத்திக் கொள்வதை விரும்பாமல் பழகுவார்கள் !

வீட்டில் செல்லமாக ராக்கி, சீசர், டேனி என்ற மூன்று நாய்களை வளர்த்து வருகிறார். விஜயகாந்த்தின் மீது அன்பைப் பொழியும் செல்லங்கள் !
(நான் பார்த்திருக்கிறேன்)

செயின் ஸ்மோக்கராக இருந்த விஜயகாந்த், திருமணத்துக்கு பிறகு அந்தப் பழக்கத்தை அறவே விட்டுவிட்டார். அசைவப் பிரியரான அவர், இப்போது அயிரை மீன் குழம்பைச் சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்கிறார்!

இதுவரை இரண்டே படங்களில் சிறு வேடங்களில் விஜயகாந்த்தாகவே வந்திருக்கிறார்.ஒன்று, ராமநாராயணன் அன்புக்காக ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’, அடுத்து டைரக்டர் பாலா கேட்டுக் கொண்டதற்கு இணங்க ‘மாயாவி’ !

கமல்,ரஜினி போன்றவர்கள் விஜயகாந்த்தை ‘விஜி’ எனவும், நெருங்கிய நண்பர்கள் ‘பாஸ் எனவும்,கட்சி வட்டாரத்தில் ‘கேப்டன்’ எனவும் அழைக்கிறார்கள் !

திருநாவுக்கரசு, ஜெயலலிதா, ஆர்.எம்.வீ. கேட்டும் தராத எம்.ஜி.ஆரின் பிரசார வேனை விஜயகாந்த்துக்குக் கொடுத்திருக்கிறார் ஜானகி எம்.ஜி.ஆர் அதோடு, எம்.ஜி.ஆர். ஜானகி எம்.ஜி.ஆர். எனப் பெயர் பொறித்த மோதிரங்களையும் தம்பதியினருக்கு வழங்கி மகிழ்ந்திருக்கிறார் திருமதி ஜானகி !

முதலில் வாங்கிய டி.எம்.எம். 2 நம்பர் அம்பாஸடர் காரை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார் விஜயாகாந்த். இன்றைக்கும் அதை ஆபீஸுக்கு எடுத்து வருவது உண்டு !

சினிமாவுக்கு வர வேண்டும் என்ற ஆசை அத்துமீறிவிட்டதால் விஜயகாந்த் எஸ்.எஸ்.எல்.சி – யைத் தாண்டவில்லை. ஆனால், வீட்டு வேலைக்காரர்களின் பிள்ளைகளை இன்ஜினீயரிங் வரைக்கும் படிக்கவைக்க உதவி செய்கிறார் !

ஞாயிற்றுக்கிழமை கேப்டன் வீட்டில் 100பேராவது சாப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலுகத்திலும் அந்த அளவுக்குச் சாப்பாடு நடக்கும். வந்து செல்கிறவர்களை வெறும் வயிறோடு திரும்ப அனுமதிக்க மாட்டார் விஜயகாந்த் !

விஜயகாந்த்தின் குலதெய்வம் வீரசின்னம்மா. மதுரைக்குப் பக்கத்தில் திருமங்கலம் அருகில் இருக்கிறது. பாழடைந்து கிடந்த கோயிலை சுற்றுச்சுவர் எழுப்பி, கும்பாபிஷேகம் நடத்தி புதுபிக்க உதவியிருக்கிறார்!



இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ஷனில் 17 படங்களும், ராமநாராயணன் டைரக்ஷனில் 17 படங்களும் நடித்திருக்கிறார் விஜயகாந்த். அவரோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் நளினி !

பாரதிராஜா தவிர்த்து பெரிய டைரக்டர்களின் படங்களில் நடித்ததே இல்லை விஜயகாந்த் !


-தவறான செய்திகள் ஏதும் இருந்தால் மன்னிக்கவும்
-THANKS TO டிஸ்கி